அமைச்சர் திகாவின் மாமியார் காலமானார்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உடகட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரத்தின் மாமியாரும்இ அவரது துணைவியார் திருமதி ஜெயந்தி திகாம்பரத்தின் தாயாருமான திருமதி ராமேஸ்வரி பொன்னையா தமது 72 ஆவது வயதில் காலமானார். அன்னார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்இ தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான சிங். பொன்னையாவின் பாரியாரும் ஆவார்.
நேற்றைய தினம் கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பூதவுடல் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஈமக்கிரியைகளின் பின்னர் கொட்டகலை கொமர்ஷியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -