மீராவோடை 4ம் வட்டாரம் ஆலிம் வீதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மட் சாஹுல் ஹமீட் (ஏஜென்ஸ்) இன்று (11) கொழும்பில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.
இவர் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல்.எம்.அஸ்கர் அவர்களின் மாமனாரும், மலிகா, அஸ்பாக், மற்றும் மர்ஹும்களான ஹஸ்ஸாலி, பைரூஸ் ஆகியோர்களின் தந்தையும், பாறூக் ஹாஜியார் (ரைஸ் மில்) என்பவரின் மச்சானுமாவார் அன்னாரின் ஜனாஸா தற்போது கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த சாஹுல் ஹமீட்யின் ஜனாஸாவை மீராவோடைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.