ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
'இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது.
டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை இந்த சிங்கப்பூரின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. இத்தகைய முயற்சியானது, தென்னாசியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் மீதான டிஜிட்டல்மயமான முயற்சிக்கு சமமாக நமது சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை கொண்டு வரப்படுகிறது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.;
நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பக செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்
இந் நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
:'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பொருளாதார தொலை நோக்குடன், தேசிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை மீதான கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. இந்த தகவல்- வர்த்தக டிஜிட்டல் தளமானது, இலங்கையில்; முதன் முறையாக மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் மற்றும் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் இதேபோன்ற வரவிருக்கும் டிஜிட்டல் தரவுத்தளங்களை போன்று இந்த முன்முயற்சி காணப்படுகின்றது. ஆகையால், இத்தகைய முயற்சியானது,தென்னாசியாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் மீதான டிஜிட்டல்மயமான முயற்சிக்கு சமமாக நமது சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை கொண்டு வரப்படுகிறது.
தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மீதான சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் கொள்கையானது, ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான, உலகளாவிய போட்டித்திறன், மாற்றம், புதுமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்படும் நிலையான சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளை உருவாக்குகிறது. தொழில்நுட்ப வளங்களினது தகவல்களை பரப்புதல் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக காணப்படுவதால் அத்துறையின் நவீன தொழில் நுட்பத்தையும் அங்கிகரிப்புக்களை மேம்படுத்துவதற்காக, சிறப்பு தொழில்நுட்ப பரிமாற்றத்தை கொள்கை கட்டமைப்பை அடையாளம் காட்டுகிறது. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முன்னேற்றம் அடைய அவற்றின் தொழில்நுட்ப அங்கிகரிப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.
2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தால் இலங்கையின் மிகப்பெரிய தொழில்முனைவோர்க்கான தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை நிறுவப்பட்டது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அபிவிருத்தி, விரிவாக்கம் ஆகியவற்றை தூண்டுகிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை ஊடுருவக்கூடிய திறனுள்ள உள்நாட்டு நிறுவனங்களை சர்வதேசமயமாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களினை இலங்கைக்கு வெளியே நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை இச்சபை ஊக்குவிக்கிறது என்றார் அமைச்சர்
இந்நிகழ்வில் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான தட்சிதா போகொல்லாகம, சிங்கப்பூர் ரெஸ் குரூப்பின் நிறைவேற்று அதிகாரி திருமதி ட்ரினா சாவேஜ், மற்றும் சர்வதேச தொழில் நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங், மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.தாஜுடீன் உட்பட பல முக்கியஸ்ர்கள் கலந்துகொண்டனர்.
புதிய தரவுத்தளமானது “NEDA-Enterprise Management System” என பெயரிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரியின் தரவுத்தள மென்பொருள் நிறுவனமும் தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து டிஜிட்டல் தள தரவுகளை பதிவேற்ற பயன்படுத்துவதற்காக தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் 250 மேம்பாட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.