கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திட்டமிட்டபடி மிகவும் சிறப்பான முறையில் ஓட்டமாவடி அல் கிம்மா தனியார் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்தில் நேற்று (23) நடைபெற்று முடிந்தது.
ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காசிமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்குடா முஸ்லிம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் P.B ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட உப அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.