ஆளுநரின் மக்கள் சந்திப்புகளை பிரதேச மட்டத்தில் நடாத்துமாறு Ex-MPS கபூர் வேண்டுகோள்


அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்புகளை பிரதேச செயலாளர் மட்டத்தில் நடாத்த முன்வர வேண்டும் என கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பளீல் பவுண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தீர்க்கப்படாது குவிந்து கிடக்கின்ற மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாகாண ஆளுநராக பதவியேற்றது தொடக்கம் திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பிரதி புதன்கிழமை தோறும் மக்கள் சந்திப்புகளை நடாத்தி வருவதானது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
இதன் மூலமாக கிடப்பில் இருந்து வந்த பல முக்கிய பிரச்சினைகள் ஆளுநரின் நேரடி தலையீடு மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளினால் தீர்த்து வைக்கப்படுவதாக அறியக்கூடியதாகவுள்ளது.

எனினும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தூரப்பயணம் மேற்கொண்டு, உரிய நேரத்திற்கு சமூகமளிப்பதிலும் சந்திப்புக்கான வாய்ப்புகளை பெறுவதிலும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தொகைப் பணச்செலவுடன் ஒரு முழு நாள் அலைக்கழிந்து, கைசேதமடைகின்ற துர்ப்பாக்கிய நிலை இம்மக்களுக்கு ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் காரியாலய மட்டத்தில் மாதம் ஒரு முறையாவது நடமாடும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி, இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறு வலியுறுத்துக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -