காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பல்வேறு வீதிகள் ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.


ஆதிப் அஹமட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினதும் தொடர் முயற்சிகளின் பலனாக ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டத்தின் கீழ் முக்கியமான பல்வேறு வீதிகள் கார்ப்பட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
மிக நீண்டகாலமாக பேசுபொருளாக காணப்பட்ட மத்திய அரசினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த ஒருங்கிணைந்த வீதி(I Road) திட்டம் தொடர்பில் பல்வேறு முயற்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் தொடராக மேற்கொண்டுவந்தனர்.அந்த வகையில் முக்கியமான பல வீதிகளை கார்ப்பட் வீதிகளாக அமைப்பதற்குரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.காத்தான்குடி,மன்முனைப்பற்று மற்றும் மண்முனை வடக்கு பிரதேசங்களில் அமைந்துள்ள மிக முக்கியமான வீதிகள் இந்த திட்டத்த்தினூடாக புனரமைக்கப்பட்ட வேண்டுமென நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.அந்த வகையில் பின்வரும் வீதிகள் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கார்ப்பட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

டீன் வீதி-1.59 கிலோமீற்றர்
முஹைதீன் பள்ளிவாயல் வீதி,புதிய காத்தான்குடி 3-1.09 கிலோமீற்றர்
விடுதி வீதி,புதிய காத்தான்குடி 6 -0.51 கிலோமீற்றர்
மத்திய வீதி,புதிய காத்தான்குடி 3-0.49 கிலோமீற்றர்
மெரைன் டிரைவ் வீதி,புதிய காத்தான்குடி -1.8 கிலோமீற்றர்
லகூன் டிரைவ் வீதி,காத்தான்குடி -1.79 கிலோமீற்றர்

இவ்வேலைத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வட கிழக்கு மாகாணங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த 52 நாட்கள் அரசில் ஏற்பட்ட குழப்பத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆதரவளிப்பதற்கு பல்வேறு சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.அந்த கோரிக்கைகளில் கிழக்கு மாகாணத்தில் இந்த வீதி அபிவிருத்தி திட்டடமானது முதன்மைப்படுத்தப்பட வேண்டுமென்பது முக்கிய கோரிக்கையாகும்.இத்திட்டங்கள் தொடர்பில் இந்த அரசிலும்,கடந்த அரசிலும் அமைச்சர் றவூப் ஹக்கீம் வீதி அபிவிருத்தி அமைச்சர்களாக கடமையாற்றிய பலரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.இவ்வேலைத்திட்டங்கள் எதிர்வரும் மே,ஏப்ரல் மாதம் அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மண்முனைப்பற்று மற்றும் மண்முனை வடக்கு அஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அமைக்கப்படவுள்ள வீதிகள் தொடர்பான பட்டியலானது அடுத்த பதிவில் வெளியிடப்படுமென யு.எல்.எம்.என்.முபீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -