காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. NFGGயின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ALM. சபீல் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு காலை 8.30 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்தல் நிகழ்வுடன் ஆரம்பமானது.
நிகழ்வின் தலைமை உரையினை அஷ்ஷெய்க் ALM. சபீல் நளீமி நிகழ்த்தினார்.
நிகழ்வின் விஷேட அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டமுதுமானி MAM. ஹகீம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இன்றைய நிகழ்வின் அதிதி உரையினையும் அவர் ஆற்றினார். இதனைத்தொடர்ந்து NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் அவர்களினால் சுதந்திர தின விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இன்றைய சுதந்திர தின நிகழ்வின் விசேட அம்சமாக பாடசாலை மாணவர்களுக்கான NFGGயின் இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு தொகுதி மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பெருமளவிலான தலைமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் ,மகளிர் அணி உறுப்பினர்கள், தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 200 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.