பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கிவரும் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் T-shirt (டிசேட்) அறிமுக நிகழ்வு கடந்த 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள போரத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி டிசேட் அறிமுக நிகழ்வில் அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரீ.எல்.ஜவ்பர்கான், புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்,எம்.எஸ்.எம்.ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதன் போது சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் இலச்சினை,பெயர் பொறிக்கப்பட்ட டிசேட் சிரேஷ்ட ஊடகவியலாளர்களினால் போரத்தின் தலைவரிடம் வழங்கி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன்,போரத்தின் உறுப்பினர்களுக்கும் அதிதிகளினால் டிசேட் கையளிக்கப்பட்டது.
இங்கு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்புரைகளை வழங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு சுயாதீன ஊடகவியலாளர் போரத்தினால் நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் குறித்த T-shirt - (டிசேட்) அறிமுக நிகழ்வில் போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ்,பொருளாளர் எம்.எச்.எம். அன்வர் உட்பட உப தலைவர்கள்,உப செயலாளர்,இணைப்பாளர்,உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.