(ZESDO ) ஒழுங்கு செய்திருந்த அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடலும் ” சிறுவர்களை மகிழ்வுட்டுவோம் ” எனும் விழாவும்

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1992 / 1994 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய ஸஹிரியன் கல்வி , சமூக அபிவிருத்தி ஒன்றியம் (ZESDO ) ஒழுங்கு செய்திருந்த அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடலும் ” சிறுவர்களை மகிழ்வுட்டுவோம் ” எனும் தொனிப்பொருளிலான சிறுவர் விளையாட்டு விழாவும் இன்று ( 19 ) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவரும் கல்முனை கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலீக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கழகத்தலைவர் என்.எம்.அப்துல் மலீக் தேசியக்கொடியினையும் கழகத்தின் செயலாளர் எஸ்.ரீ.எம்.சதாத் மற்றும் பொருளாளர் ஏ.யு.எம்.இர்ஸாத் ஆகியோர் இணைந்து ஒன்றியத்தின் கொடியினயும் ஏற்றி வைத்ததனைத் தொடர்ந்து அனைத்து அங்கத்தவர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
சிறுவர் விளையாட்டு விழா ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது. போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு ஒன்றியத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -