தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித் தலைவியும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அவரோடு நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், எம். ராம், அட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், இந்நாள் உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் மற்றும் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
மேற்படி மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து கலை நிகழ்சிகளுடன் பெண்களின் ஊர்வலம் இடம்பெற்று டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தை வந்தடையும்.
அன்றைய தினம் பல்வேறு துறைகளில் தமது திறமைகளின் ஊடாக பிரகாசித்து வரும் மலையகப் பெண்கள் பலர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் பிரிவு அமைப்புக் குழு ஏற்பாடு செய்து வருகின்றது.