அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளராக எஸ். எம்.எம்.ஹனீபா அதிக உறுப்பினர்களின் விருப்பத்துடன் தெரிவு.

 ட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ். எம்.எம்.ஹனீபா சபையின் அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளராக இருந்த எம்.எஸ்.ஜெளபர் தான் சார்ந்திருந்த தேசிய காங்கிரஸில் இருந்து தனது சகோதரர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையுடன் விலகிக் கொண்டமையினால் இப்பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

குறித்த வெற்றிடத்துக்கே இன்று பலத்த போட்டி நிகழ்ந்திருந்தாலும் அதிக உறுப்பினர்கள் எஸ்.எம்.எம்.ஹனீபாவுக்கே தங்களின் ஆதரவைத் தெரிவித்ததனால் இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.



இவர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆரம்பகால போராளியாகவும் பாலமுனைக்கான ஆரம்ப அமைப்பாளராகவும் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு அதிக தொண்டாற்றியவர்.

அத்துடன் ஒரு நேர்மையான குணம் கொண்ட இவர் மக்களுடன் அதிக நெருக்கம்கொண்டவர். கல்வித்துறையில் அதிக நாட்டம் கொண்ட இவர் இரு தசாப்தங்களாக பாடசாலை அதிபராகக் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -