பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது.
பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் பிழை ஏற்பட்டதற்கு பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியதாக தகவல் வெளியகியுள்ளது.
ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் அறியப்படும் நபர் தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிழைக்கு பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இவருக்கு கூகுள் தரப்பில் இருந்து 80 டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதித் தொகைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது.
பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மதிப்பு 9000 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டிருப்பதை ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் கூகுள் மீதித் தொகையை கொடுத்தால், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பிக்சல் சாதனங்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், கூகுள் நிறுவனம் பிழை ஏற்பட்ட சாதனத்திற்கு வெறும் 80 டாலர்களை மட்டுமே கொடுத்திருக்கிறது. இத்துடன் சீடோஸ் பின்க் நிற பிக்சல் போன் ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.
ஒரு போன் முன்பதிவு செய்ததற்கு கூகுள் பத்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அவருக்கு விநியோகம் செய்திருக்கிறது.