இலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை இன்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திகதி குறிக்கப்படாத போதும் குறித்த 13பேருக்கும் உடனடியாக மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைகள் இடம்பெற்றனவா? என்பது ஆராயவேண்டிய விடயமாகும்.
1976ஆம் ஆண்டுடன் மரணதண்டனை இலங்கையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னோக்கி செல்லக்கூடாது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.ibc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -