2019ஆம் ஆண்டிற்கான கலாபூஷண அரச விருதுக்காக விருது பெறுபவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு சமயத்தவர்களும் அந்தந்த சமய திணைக்களங்களில் தமது விண்ணப்பங்களை உரியவாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வகையில் முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவிக்கின்றார்.
2019.12.15ஆம் திகதியன்று 60 வயதைப் பூர்த்தி செய்த முஸ்லிம் கலைஞர்கள் விண்ணப்பங்களை திணைக்களத்தில் அல்லது திணைக்களத்தின் றறற.அரளடiஅயககயசைள.பழஎ.டம எனும் இணையளத்திலிருந்து பெற்று அதனை பூர்த்தி செய்து தமது விண்ணப்பங்களை பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல.180, டி.பி.ஜாயா மாவத்தை, கொழும்பு-10 என்னும் விலாசத்திற்கு 2019.05.31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பித்தல் வேண்டும்
நாட்டின் கலைத் துறைக்கு உன்னத பங்காற்றியவர்களை கௌரவிப்பதற்கா இந்த விருது வழங்கள் விழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு விருதுக்காக தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு விஷேட அரச நினைவுச்சின்னம், பொற்கிளி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.