கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட குயின்ஸபெரி தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கபடவுள்ள 50 தனிவீடுகளுக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வில் 07-04-2018 ஆம் திகதியன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் இலஙலகை அரசாங்கத்தின் காணி வழங்கலுடன் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளை வீடமைப்பு முகவர் நிறுவனங்களின் ஆலோசனை உதவியுடன் பயனாளிகளே வீடுகளை அமைக்கின்றனர். எனவே மக்கள் தாமாகவே வீடுகளை அமைக்கும் கலாசாரத்தினை இப்போது கொண்டு வருகிறோம். பல தலைமுறைக்காக வீடுகள் இன்றி லயத்து சிறையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இப்போது அமைக்கப்படும் தனிவீடுகள் ஒரு குடும்பத்திக்கானதல்ல நான்கு ஐந்து தலைமுறைக்கு ஆனது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வீ. புத்தரசகாமணி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங். பொன்னையா, எம்.ராம் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள் காளிதாஸ், முத்துக்குமார், ஆர். சிவகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.