எங்களுக்கே 51 வீத மக்கள் செல்வாக்கு, விரைவில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்-மகிந்த

னாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

51 வீதத்துக்கும் மேலதிக வாக்குகளைப் பெறக் கூடிய தகுதியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தமது கூட்டணியில் இருப்பதாகவும், அவரை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்துவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

நேற்று (19) நுவரெலிய வலபனே மந்தாரம்நுவர பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சிக்குள் கருத்து முரண்பாடு இல்லை. எமது இறுதித் தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் புத்தியுள்ள மக்கள் அதனை நன்கு விளங்கிக் கொள்வார்கள்.

மக்களுக்கு இன்று நீர் இல்லை. குடிநீர் இல்லை. குறைந்த பட்சம் தோட்ட மக்கள் கேட்ட சம்பள உயர்வைக் கொடுக்க இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போனது. எமது ஆட்சிக் காலத்தில் கேட்டதைக் கொடுத்தோம். தற்பொழுது தோட்டப்புற மக்களுக்கு தீர்மானம் எடுக்கும் காலம் வந்துள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -