ஆதிப் அஹமட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும்,காத்தான்குடி பிரதேச அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினதும் பூநொச்சிமுனை,மஞ்சந்தொடுவாய் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்குழுக்களினதும் வேண்டுகோள்களின் பேரில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பூநொச்சிமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களிலுள்ள பல்வேறு வீதி அபிவிருத்திகளுக்கு சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா கம்பரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டமூடாக 5.5 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த வகையில் மஞ்சந்தொடுவாய் சம்சுதீன் வீதி மற்றும் 1ம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,மஞ்சந்தொடுவாய் அப்துர்ரஹ்மான் 2ம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,பூநொச்சிமுனை ஹிலுறியா ஜும்மா பள்ளிவாயல் 4ம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 15 இலட்சமும்,ஹிலுறியா ஜும்மா பள்ளிவாயல் 3ம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 15 இலட்சமும்,மஞ்சந்தொடுவாய் ஹுஸைனியா 1ம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 5 இலட்சமும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் இந்த அபிவிருத்திப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.