கல்முனை ஆதார வைத்தியசாலையில் அஞ்சலியும் சுடரேற்றலும் !



காரைதீவு நிருபர் சகா-
டந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற  தீவிரவாதிகளின் மனித நேயமற்ற செயலினால் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இறை ஆசி வேண்டி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 3 நிமிட மௌன இறை பிரார்த்தனை கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன வழிகாட்டலில் வைத்தியர் என். ரமேஷ் (இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி) அவர்களினால் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அனைத்து தர உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்றையதினம் மாலையில் ஈகைசுடரேற்றல் சித்தி விநாயகர் ஆலய முன்றலிலும் இடம்பெற்றுள்ளது. இதனை வைத்தியர் திருமால் (சுகாதார கல்வி பொறுப்பு வைத்திய அதிகாரி) பொறுப்பேற்று நடத்தினார்.

மிகவும் ஆபத்தான அவசர வேளைகளிலும் இவ்வாறான பிரேத்தியேக கடமைகளையும் தவறாது நடத்த உதவும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரனதும்இ சக முன்னிலை சேவையாளர்களினதும் சேவை மகத்தானது. மேலும் இரத்த தான நிகழ்வை மிக விரைவாக நடத்தியதும் சாதாரண விடயமல்ல என பொது அமைப்புக்கள் பாராட்டையும் தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -