-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்-
இந்த நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்துவோம்; தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஏலவே கண்டு கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தவறியமை நாம் அனைவரும் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.எமது அசமந்தப் போக்கின் விளைவாக விலைமதிக்க முடியாத பல அப்பாவி மனித உயிர்களை இழந்து தவிக்கின்றோம்.
இனி, உடன் செய்ய வேண்டிய விடயங்களில் கவனத்தைக் குவிப்போம்.
இலங்கையர் என்ற வகையில் பேதங்களை மறந்து இருதய சுத்தியுடன் ஒன்றிணைவோம்; தீவிரவாத விஷக் கிருமிகளை அடையாளம் கண்டு துடைத்தெறிவோம்.
நம் தாய் மண்ணை காப்பாற்ற, நாளைய தலைமுறையினர் இம்மண்ணில் அமைதியாக வாழ்வதை உத்தரவாதப்படுத்த அர்ப்பணிப்புடன் களமிறங்குவோம்; செயற்படுவோம்; சாதிப்போம்.
அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!