தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்று இரண்டு மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த மூவரடங்கிய விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பொலிஸ் மா அதிபர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் மூவரடங்கிய விசாரணைக்குழு அமைந்துள்ள வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின்போது பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டது.வீகே