இன்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தமது ஆலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி கத்தோலிக்க மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்கள் எமது மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் கொடிய யுத்தம் இல்லாதொழிந்து மக்கள் சிலவருடங்களாக சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கும் தருணத்திலேயே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இன்று இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதல்களுடன் இணைத்து பரப்பப்படும் வதந்திகள்,பொய்ப்பிரச்சாரங்கள் போன்ற விடயங்களில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அப்பாவிகளின் சுமூகவாழ்வை குழப்பி குளிர்காய எத்தனிக்கும் கயவர்களுக்கு இடமளிக்காமல் மக்கள் அமைதியாக இருந்து அரசாங்கம் முன்னெடுக்கும் தேசியப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நாம் உதவ முடியும்.
இன்றைய துயரமான பொழுதில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் காயமுற்றோர், உறவுகளை இழந்தோருக்காக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கெளரவ காதர் மஸ்தான் எம்.பி.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சரும்.
ஊடக அறிக்கை