நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாத சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

நாட்டை சீரழித்த யுத்தமும், போதைப் பொருளும் முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் சமூகங்களுக்கு இடையில் கசப்புணர்வை ஏற்படுத்திய இவ்வாறான பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை வன்மையாக கண்டிக்கிறேன் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்
நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பை முறியடித்து செயற்படும் இவ்வாறான குண்டு வெடிப்பு பயங்கரவாதச் சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டு நாட்டை குட்டிச் சோராக்குவதற்கு விட முடியாது.

இதனால் மன வேதனை அடைகிறேன். பயங்கரவாத சம்பவங்கள் நடப்பதை எந்தச் சமுதாயமும் வரவேற்காது.
முஸ்லீம் சமூகம் இஸ்லாத்தின் சிந்தனையில் சிந்திக்கிறது சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் .
சமாதானம், அபிவிருத்தி,போதை ஒழிப்பு ஏற்படுகின்ற கால கட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை எமது கட்சி , நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதம மந்திரி உட்பட கட்சி பேதமற்ற முறையில் சிந்தித்து பூரண ஒத்துழைப்புக்களுடன் ஆட்சியாளர்களாக இருக்கின்ற மற்றும் அரச அதிகாரிகள் இதற்காக மத நல்லிணக்கத்தை உருவாக்க இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் .

நாட்டின் அந்நியச் செலவாணி, பொருளாதாரம் என்பன சீரழிந்து அழிவுப்பாதைக்கு இட்டுள்ளது இதனை ஒரு போதும் ஏற்க முடியாது

நாட்டினுடைய ஒற்றுமைக்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

கிறிஸ்தவ மக்கள் உலகலாவிய ரீதியில் உன்னதமான நாளாக கொண்டாடும் இன்றைய தினத்தில் அவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி உயிர்களை , உடைமைகளை எவ்வாறு தாங்கிக் கொள்வது .
இதனால் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்களின் துக்கத்திலும் துயரத்திலும் பங்கு கொள்கிறோம். அமைதியையும் தைரியத்தையும் இறைவன் இழப்புக்களை தாங்கியவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை கொடுக்க மீண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -