நாட்டின் பாதுகாப்புக் கருதி மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் அதிக இரைச்சலுடன் மற்றும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வாகன ஒலிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை,
மோட்டார் வாகனங்களில் வெளிச்சம் சம்பந்தமான விதிமுறைகளை மீறும் வகையிலான கருவிகளைப் பொருத்தியவர்களுக்கு எதிராகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இத்தகைய சட்டவிரோத உபகரணங்களை அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்கப்படும் என, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இப்புதிய சட்டங்கள், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.