சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் -பிரதேச செயலாளர் றிகாஸ் வேண்டுகோள்

றியாத் ஏ.மஜீத்-

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைமையை கருத்திற்கொண்டு சாய்ந்தமருது பள்ளிவாசல்கள்,பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பிரதேசங்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஐ.எம்.றிகாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முந்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து சாய்ந்தமருதுபிரதேச மட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாக கூட்டம் இன்று (23) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேசசெயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.மிஹ்லார், கல்முனை பொலிஸ் நிலையபொலிஸ் பரிசோதர் ஏ.எல்.ஏ.வாஹிட், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல்நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் ஏ.மஜீத், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் செயலாளர்எம்.எப்.ஏ.வாசித், மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஏ.ஜெமீல்,சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பிரதேச செயலாளர் றிகாஸ் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வணக்கஸ்தலங்கள் மீது இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதனால் சாய்ந்தமருது பிரதேசபள்ளிவாசல்களின் பாதுகாப்பினை பள்ளிவாசல்கள் பரிபாலன சபை மற்றும் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள்ஆகியோர் இணைந்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும். பள்ளிவாசல் வெளிப்புறத்தில் பாதுகாப்புபடையினர்கள் பாதுகாப்பளித்தாலும் பள்ளிவாசலினுள் பொதிகளுடன் வருபவர்களை சோதனையிடுவதற்கும்வெளியூர்களிலிருந்து வருபவர்களை கண்கானிப்பதற்கும் அவர்களுக்கு அசௌகரிமில்லாதவாறு ஒருபொறிமுறையினை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து பொதுமக்களும்ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறே பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாககூடும் பொது இடங்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் ஆலோசனைகளைவழங்கினார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து அவசரகால சட்டம் நாட்டில்இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் தொடர்பாக எமது இளைஞர்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.இன்றைய கால இளைஞர்கள் யுத்த காலத்தின் போது சிறுவர்களாக இருந்திருப்பார்கள் அவர்களுக்கு இச்சட்டம்தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இச்சட்டம் பற்றி பொதுமக்கள், இளைஞர்;கள், மாணவர்களுக்குதெளிவூட்டுவது அரச மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பொறுப்பாகும். அத்துடன் இச்சட்டத்தைஅனைவரும் மதித்து பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் கூடக்கூடிய வகையில் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை நாம் எனது பிரதேசத்திலும் பின்பற்ற வேண்டும். எனவே இவ்வாறானநிகழ்வுகளுக்கான பாடசாலை மண்டபங்கள் மற்றும் பொது இடங்களை அதற்கு பொறுப்பான அதிகாரிகள் வழங்கக்கூடாது எனவும் பொது இடங்களில் கூட்டமாக நிற்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -