ஏஎம் .றிகாஸ் ஏறாவூர்
அரசாங்க பொதுப்பரீட்கைகளில் அடைவு மட்டத்தை அதிகரிக்கச்செய்ய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் (08.04.2019) விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான நிகழ்வு வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர்மௌலானா தலைமையில் நடைபெற்றது.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், பிரதிக்கல்வி, உதவிக்கல்வி, கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலேர்சகர்கள், இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
அரசாங்க பொதுப்பரீட்கைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் முன்னிலை வகித்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; அண்மைக்காலமாக அடைவு மட்டத்தில் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் தேசிய ரீதியிலுள்ள 97 கல்விவலயங்களில் மட்டக்களப்பு மத்தி கல்விவலயம் முதலிடம் பெற்றிருந்தது. கடந்த வருடம் 37 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் வெளியான பெறுபேற்றின் பிரகாரம் 57 இடத்திற்கு பின்னோக்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பரீட்சைப் பெறுபேறுகள் பின்னடைவிற்கான காரணங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.