அந்த வகையில் காக்தான்குடி பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸின் பணிகளை விஸ்தரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கிராம மட்ட இளைஞர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று(13) இடம்பெற்றது.காத்தான்குடி பிரதேசத்தின் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் A.L.ஆதிப் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தருமான M.Y.ஆதம், இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் A.L.ஆதிப் அஹமட் ஆகியோர் உரையாற்றியதுடன் பிரதம அதிதி யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் நமது முஸ்லிம் சமூகத்துக்கான கட்சியின் தேவைப்பாடு அவசியம், எதிர்கால சந்ததிக்கான இந்த கட்சியின் அவசியம் தொடர்பிலும்,இந்த கட்சியோடு இளைஞர்கள்,இணைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியமான பணிகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் இளைஞர்களே இந்த கட்சியை பொறுப்பெடுத்து நடாத்த வேண்டியதான் அவசியம் பற்றியும்,வட்டாரங்கள் ரீதியாகவே இளைஞர் காங்கிரஸ் கிளைக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவாக விளக்கினார்.
இக்காலந்துரையாடலில் காத்தான்குடி மூன்றாம் வட்டார ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவருமான T.M.தௌபீக் Jp, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஞ்சந்தொடுவாய் பிரதேச அமைப்பாளர் ஜப்பார்,மஞ்சந்தொடுவாய் கிளைக்குழுவின் செயலாளர் ரவூப் உற்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இளைஞர்களுக்கான இளைஞர் காங்கிரஸ் அங்கத்துவப்படிவங்களும் கையளிக்கப்பட்டன.