அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐந்தாம் ஆண்டு பரீட்சை கட்டாயமில்லை என்ற இந்த அரசின் கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு ஒன்றுதான் நல்லாட்சி அரசின் மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது.
ஐந்தாம் ஆண்டு போட்டிப்பரீட்சை என்பது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் பெற்றோருக்கும் அநாவசிய பிரச்சினைகளை கொடுக்கிறது.
அது மட்டுமல்லாமல் பரீட்சையில் சித்தியடையும் மாணவன் அவனின் தந்தை வருமானம் உடையவர் என்பதற்காக அவனுக்கான புலமைப்பரிசில் பணம் மறுக்கப்படுவதால் தனது கஷ்டத்துக்கு நன்மை கிடைக்காத நிலையில் அந்த மாணவன் தனது சூழலின் நம்பிக்கையை இழக்கிறான்.
இது விடயங்களை 2008 முதல் உலமா கட்சி பகிரங்கமாக அரசுக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரி வந்துள்ளது.
இந்த வகையில் நல்லாட்சி அரசின் கல்வி அமைச்சருக்கும் இது விடயத்தில் நேரடியாக தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் உலமா கட்சி நன்றி தெரிவிக்கிறது.