ஜம்மியதுல் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா அமைப்பின்; ஊடக மாநாடு


ஓட்டமாவடி 
அ.ச.முகம்மது சதீக்-
ம்மியதுல் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா அமைப்பின்; ஊடக மாநாடு தாருஸ் ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்றது . இவ்வூடக மாநாட்டில் முதலில் கல்குடா ஜம்மியத்துத் தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு
கடந்த 21.04.2019ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா வன்மையாகக் கண்டனத்தை அதன் தலைவர் அஸ்ஸெய்க் ஏ.எல் பீர் முஹம்மத் மௌலவி தெரிவித்தார்.

வணக்கஸ்தலங்களில் தாக்குதல் மேற்கொள்வதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் போன்றோரை யுத்தத்தில் கூட தாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதும் மனித நேயத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானதுமான செயற்பாடுகள் எனத் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மரணித்த உறவுகளின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஆறுதல் கூறுவதுடன் இத்தகைய தீவிரவாத சிந்தனைகள் இஸ்லாத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கடந்த காலங்களில் இத்தகைய தீவிரவாத சிந்தனை கொண்டோரின் கொள்கைகளை வன்மையாக கண்டித்து மாநாடுகளையும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகவும் மற்றும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கள் மூலமும் இதனை மக்களுக்கு தெளிவு படுத்தியதாகவும் புகைப்பட ஆதாரங்களையும் பத்திரிகை செய்திகளையும் காட்டி பேசினார்.

இத்தாக்ககுதல் தௌஹீத் எனும் இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கையை கலங்கப்படுத்தும் நோக்கில் தொடர்பு படுத்திப்பேசப்படுகின்றது தௌஹீத் எனும் ஓரிரைக்கொள்கையை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றிருக்கின்றனர் தௌஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றனர் எனவும் அத்துடன் இத்தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினரை சரியாக அடையாளங்கண்டு உரிய தண்டனை வழங்க அனைவரும் ஒத்துழைக்குமாறும் வேண்டினார்.

அதன்பின்னர் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் பொலிஸ் தரப்பால் தேடப்படுகின்றார் என்ற இணைய நாளிதழ்களில் பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்வதனை மறுத்து அந்தத் தேடப்படுவதாக கூறிய உறுப்பினர்களுடன் ஊடாக மாநாடும் தொடர்ச்சியாக நடைபெற்றது

இப்பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முழு இலங்கை முஸ்லிம்களும் மிகவும் கவலையுற்று, வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எம்முடன் விரோதம் கொண்ட சிலர் இப்பயங்கரவாதச் செயலுடன் எம்மைச் சம்பந்தப் படுத்திப் பேசியும் எழுதியும் வருவதுடன் இன்றைய தினம் தஎpநெறள.உழஅ எனும் இணைய தளத்திலும். இ டியவவiயெவாயஅ போன்ற இணைய தளங்களிலும் எமது புகைப்படங்களைப் பிரசுரித்து நாம் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அரசினால் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி நாம் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்தமாறும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றமையை வன்மையாக கண்டித்தனர். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சைபர் கிறைமிலும் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய ஊடகங்களுக்கெதிராகவும் இவற்றுக்குப் போலியான செய்திகளை அனுப்பி வைத்து குளிர்காயும் செய்தியாளர்களான சமூக விரோதிகளுக்கெதிராகவும் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா கேட்டுக்கொண்டது .
மற்றும் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தனக்கோ தனது அமைப்பினருக்கோ சஹ்ரான் என்பவருடன் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அமைப்பு ரீதியாக எவ்விதமான தொடர்புகள் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இந்த அமைப்பினர் கிறிஸ்தவ சமய பெரியார்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -