அந்த வகையில் நேற்று 18.04.2019 ஒலுவில் மண்ணுக்கு வந்த ஆளுனர் அவ்வாறே அழகான முறையில் தனது பேச்சையும்கூட சமூகத்தின் நலன்கருதி சிறிதளவும் அரசியல் நோக்கமில்லாமல் பகிர்ந்து கொண்டார்.
அரசியல் சார்பான கருத்துக்களையோ கட்சி சார்பான விடயங்களையோ மக்கள் மத்தியில் தினிக்காமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் அவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டால் மட்டுமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவருடைய அழகான பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது' இதுவே இவருடைய ஆளுமையின் அடையாளம் எனலாம்.
மேலும் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று அழிந்து கொண்டிருக்கும் ஒலுவில் மக்களின் அவலங்களை நேரில் கண்டதோடு அங்குள்ள புத்திஜிவிகளுடனும், ஊர் தலைவர்களுடனும், இளைஞர் அமைப்புக்களோடும் கழந்துரையாடி எந்தளவுக்கு ஒலுவிம் மண்ணின் தேவைகள் அவசியம் என்பதனையும் தெரிந்து கொண்டார். அதற்காக ஒலுவில் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்புக்குரிய ஆளுனர் அவர்களே இந்த ஒலுவில் மண் அன்றிலிருந்து இன்றுவரை யாரு வந்தாலும் எந்த கட்சி வந்தாலும் அன்போடு ஆதரித்து அவர்களை கெளரவப் படுத்துவார்கள் இது இந்த மண்ணின் மகிமை. அதனால்தான் வந்தாரை வாழவைக்கும் ஒலுவில் என்றும் சொல்லுவார்கள்.
ஆனால் யாரையெல்லாம் ஆதரிக்கிறோமோ அவர்களின் தேவைகள் முடிந்ததும் அந்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டு செல்லுகிறார்கள் என்பதே கடந்த காலங்களில் நாங்கள் கற்றுக் கொண்ட கசப்பான அனுபவமாகும்.
மர்ஹும் தலைவர் கூட இந்த ஒலுவில் மண்ணை அதிகமாக நேசித்தார் என்பதை நான் சொல்லி அறிந்து கொள்ள வேண்டியதில்லை' அதை நீங்களே நன்கு அறிவீர்கள் என்பதை உங்கள் பேச்சிலே மர்ஹும் தலைவர் கட்டிய ஒலுவில் வீட்டை சுட்டிக் காட்டினீர்கள் அல்ஹம்துலில்லாஹ். அந்த வீடு இன்று தலைவரின் கதிரையில் இருப்பவர்களின் கண் கெட்டுப் போய் கவனிப்பாரற்று பேய் வீடாய் காட்சி தருகிறது அது வேறு விடயம் சேர்.
இப்படியெல்லாம் இந்த ஒலுவில் மண் இருந்தும்' தேசிய அபிவிருத்தியின் பங்காளிப்புக்காக தன்னையே இழந்து பலகோடி பொறுமையாக சொத்துக்களையும் காணிகளையும் பறிகொடுத்து ஏமாற்றப்பட்டே வருகிறது இன்றுவரை.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு சுமார் 300 ஏக்கர் நிலமும், துறைமுகத்துக்கு 350 ஏக்கர் நிலமும், கலரிப்பு காரணமாக சுமார் 50 ஏக்கர் நிலமும், பேரினவாதிகளால் பொன்னம் வெளி வயற்காணி 350 ஏக்கர், பால் கேணி 500 ஏக்கர், தொல் பெருள் திணைக்களத்தால் 50 ஏக்கர் இப்படியே கிட்ட தட்ட 900 ஏக்கர் காணிகளை இழந்துள்ளார்கள் ஒலுவில் மக்கள்.
மொத்தமாக இலங்கை வீதாசாரப்படி ஆகக் கூடுதலான நிலப்பரப்பை இழந்துள்ளார்கள் எனலாம். ஆனால் அதனால் அவர்கள் அடைந்தது எதுவுமில்லை இதுவரை' ஏமாற்றத்தைத் தவிர. அதுமட்டுமா முதுகெழும்பாக நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மீன்பிடியை கூட இழந்து செய்வதறியாது தவிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு செயற்பாட்டாளர் என்பதை நாங்கள் கடந்த காலங்களில் கண்டு கொண்டே வருகிறோம்' உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி இந்த மண்ணில் இருந்திருந்தால் இந்த ஊர் மட்டுமல்ல முழு பகுதியுமே பல அபிவிருத்தியை கண்டிருக்கும் என்றும் கூட நினைத்து பேசியதுமுண்டு.
இப்படியான நிலையில்தான் ஒலுவில் மண்ணுக்கான உங்கள் வரவில் அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது' உண்மையில் மிகவும் சந்தோசமாகவும் இருந்தது உங்கள் வரவைக் கண்டு அல்ஹம்துலில்லாஹ்.
ஆளுனர் அவர்களே தயவு செய்து உங்களுடைய பதவிக்காலம் முடிவடைவதற்க்குள் இந்த ஒலுவில் மக்களின் தேவைகளை பிரச்சினைகளை உங்களால் முடிந்தளவு எதை எதையெல்லாம் செய்து தரமுடியுமோ! அதையெல்லாம் மிகவிரைவாக முடித்துத் தாருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இன்னெருவர் வந்தால் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது அல்லாஹ் அறிவான். ஆனாலும் உங்களைப்போல் செயற்படுவாரா என்றால்? நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன். நீங்கள் ஒரு செயல் வீரர்
அல்லாஹ் உங்களுக்கு இன்மையிலும் மறுமையிலும் நற்கூலியைத் தருவான் இந்த மக்களின் உலக வாழ்வுக்கு நின்மதியை ஏற்படுத்திக் கொடுங்கள்!அதற்காக இந்த மக்களும் உங்களுக்கு நன்றிக்கடனாக எல்போதும் இருப்பார்கள் இறைவனிடம் கை ஏந்தியவர்களா.
ஒலுவில் ஜெலில்