மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் தோற்றமே மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் 

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் தோற்றமே மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது இதனால் இன்று நீதிபதிகளும்,பேராசிரியர்களும், பல்துறைசார்ந்த விற்பன்னர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என ஷம்ஸ் மத்திய கல்லூரியின் முதல் பட்டதாரியும்,தற்போதய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருமான ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறவுள்ள வைரவிழா தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு சனிக்கிழமை(13-04-2019)பாடசாலையின் மருதூர்க்கனி விரிவுரை மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது இங்கு விளக்கமளித்த போதே அன்சார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்; தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-இப்பாடசாலை 1978ஆம் ஆண்டு விசிய சூறாவளி,2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் போன்ற பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்த போதிலும் இந்தப் பாடசாலையின் மூலமாக சிறந்த கல்விப் பெறுபேறுகளும்,தேசிய மட்டச் சாதனைகளும,மாவட்ட மட்டச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன இவை அனைத்தும் மருதமுனையின் வரலாற்றுத் தடயங்களாகும்.
இப்பாடசாலையில் மருதமுனை மாணவர்கள் மாத்திரமன்றி அம்பாறை, மட்டக்ளப்பு, திருகோணமலை,அனுராதபுரம்,குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உள்ளீட்;;ட இலங்கையின் பல கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி கற்று உயர் பதவிகளில் உயர்ந்திருக்கிறார்கள் வெளிநாடுகளிளும் உயர்பதவிகளை வகுத்து வருகின்றார்கள்.
இந்தப் பாடசாலையில் கொண்டாடப்படவிருக்கின்ற வைரவிழாவில் இப்பாடசாலையின் சாதனைகளை நாங்கள் அடையாளப்படுத்தவிருக்கின்றோம் அதே போன்று எதிர்கால செயற் திட்டங்களையும் முன்மொழிய இருக்கின்றோம்.அது மாத்திரமன்றி இப்பாடசாலைக்கு மாணவர்களுக்கான விடுதி,ஆராதனை மண்டபம்,விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு உள்ளீட்ட பல தேவைகளும் நிறைவு செய்ய வேண்டியிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பழைய மாணவர்களான யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில்துறை பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைதீன்,முன்னாள்அதிபர் ஏ.எம்.ஏ.சமட்,பேராசிரியர் இஸ்மாயில் நியாஸ் எம்.அப்பாஸ் அகியோர் கருத்துக்களைத் தெரிவித்தனர். மேலம் முன்னாள் அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,பழைய மாணவர்கள்,அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
(படஉதவி:-ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ்)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -