சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொலிஸ் ஊட்கப் பேச்சாளர்.

ம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

அரசாங்க புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு பொருட்களை கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இன்று (26) பிற்பகல் மேற்கொண்ட குறித்த தேடுதல் நடவடிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சயில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் 150 ஜெலிக்னைற் குச்சிகள், சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு பந்துகள்), ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று மற்றும் வேன் ஒன்றும் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -