அப்படியிருந்தும் சுமார் மூவாயிரம் சாய்ந்தமருது மக்கள் தனிச்சபை கோரிக்கையை முன் வைத்த சுயேற்சையை எதிர்த்து தாம் ஐக்கிய கல்முனையை விரும்புவதாக வாக்களித்துள்ளனர்.
சாய்ந்தமருது தேர்தலை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார்தானே என்கின்றனர். புலிகளின் தடை இருக்கும் போது 150 வாக்குகள் பெற்றோரும் தேர்தல் ஆணையாளரால் ஏற்கப்பட்டு பாராளுமன்றம் சென்றனர்.
தேர்தல் ஆணையாளர் எப்போது தேர்தலை நிராகரிப்பார் தெரியுமா? சாய்ந்தமருதில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கவில்லை என்பதால் அதனை நாம் ஏற்க முடியாது என அங்கு போட்டியிட்ட கட்சிகள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தால் நிச்சயம் நிராகரித்திருப்பார். ஆனாலும் கட்சிகள் அப்படி செய்யாமைக்காக சாய்ந்தமருது மக்கள் நன்றிக்கடமை பட்டுள்ளார்கள்.
ஆகவே பலாத்காரத்தினாலும் வன்முறையாலும் எதுவும் சாதிக்க முடியாது. மக்கள் மத்தியில் சுதந்திரமும் ஜனநாயகமும் வேண்டும்.
கடந்த தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாயல் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா கட்சிகளும் வாருங்கள். பிரச்சாரம் செய்யுங்கள். சாய்ந்தமருதுக்கு தனிச்சபை வேண்டாம் அனைவரும் கல்முனை மாநகர சபையுடன் இருப்போம் என கூறும் கட்சிகளும் மேடை போட்டு பேசுங்கள் என கூறி போட்டிக்கு இடமளித்திருந்தால் அதன் பின்னும் சுயேற்சை வென்றிருந்தால் அது உண்மையான ஜனநாயக தேர்தலாகும்.
ஒரு சிலரின் பதவி வெறிக்காக சாய்ந்தமருது மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்கள். இதனை விடுத்து சாய்ந்தமருது மக்களும் கல்முனைக்குடி மக்களும் ஒன்று பட்டு கல்முனையை தக்க வைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத் மதனி.