சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட இதர செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சாய்ந்தமருது பிரதேசசெயலாளர் றிகாஸ் தலைமையில் குழு நியமனம்!

றியாத் ஏ. மஜீத்-
சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதுல் சம்பவத்தை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்டபொதுமக்களின் நலநோம்பல் மற்றும் இதர செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்களை இயல்வு நிலமைக்கு கொண்டு வரும் பொருட்டும் சாய்ந்தமருதின்பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்சம்பந்தமாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (29) திங்கட்கிழமை; சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், எம்.றபீக், ஏ.அஸீஸ், எம்.ஜஃபர், எம்.எம்.பஸ்மீர்,அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல்பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்தியஅதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்லார், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா,செயலாளர் ஏ.எல்.ஏ.மஜீத், உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள்,திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி உயர்மட்ட கலந்துரையாடலின் போதே இக்குழு நியமிக்கப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலில்,

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதுல் சம்பவத்தை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்டபொதுமக்களின் நலநோம்பல் மற்றும் இதர செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இதில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல்பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்தியஅதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்லார், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா,சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக், சாய்ந்தமருது ஜம்மிய்யதுல்உலமா தலைவர் எம்.எம்.எம்.சலீம், கிராம சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம்.மாஹிர், எம்.இல்பான்உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் 6 பேர் அடங்களாக இக்குழு அமைக்கப்பட்டது.
சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரைவாடகைக்கு கொடுக்கப்பட்ட வீடுகளின் தகவல்களை உடன் திரட்டுமாறு அந்தந்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளைவாடகைக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் பிரதேசவாசிகளுக்கு கொடுக்கும்; போது குறித்த வாடகை நபர் சம்பந்தமானஆள் அடையாளத்தை வாடகைக்கு வீட்டினை கொடுப்போர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பைமேலும் உறுதிப்படுத்த மேலதிக பொலிஸாரை கடமைக்கு அமர்த்தி ரோந்து நடவடிக்கைகளை பிரதேசத்தின்பிரதான இடங்களுக்கு முடுக்கி விடுதல்.

அச்சம் காரணமாக சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டத்திலிருந்து வெளியேறியுள்ள மக்களைமீள குடியமர்த்தல் மற்றும் குறித்த பிரதேசத்தில் முழுநாள் சிரமதானம் உள்ளிட்ட தொற்றா நோய்களைதடுப்பதற்காக பணியினை மேற்கொள்ளல்.

ஜூம்ஆத் தொழுகையின் போது பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக பாதுகாப்புபடையினருடன் பிரதேச இளைஞர்களை இணைந்து செயற்பட அதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையினைமேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -