சகல மீன்பிடித் துறைமுகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயணிக்கும் அனைத்துப் படகுகளும் சோதனை


நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி சகல மீன்பிடி துறைமுகங்களின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் மீன்பிடித் துறை முக கூட்டுத்தாபனம் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தி செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரிவினருக்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் அல்லது குழு நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு சகல மீன்பிடித் துறைமுகங்களுக்கும் வருபவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளை மீன்பிடித் துறைமுகங்களின் பாதுகாப்புப் பிரிவு மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருதல் மற்றும் கொண்டு வரப்படும் பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு சகல மீன்பிடித் துறைமுகங்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புக் கமிட்டி ஒன்றை அமைத்து உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அதேவேளையில், மீன்பிடிப் படகுகளை வெளியாட்களுக்கு பாவிக்க முடியாத படி பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மீன்பிடித் துறை முக கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ரிஹ்மி ஹக்கீம்,
இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -