கடந்த 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக இருந்த போது சகல வேட்பாளர்களையும் அழைத்து கலந்துரையாடினார். அந்த சந்தர்பத்தில் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன். ஏனைய இந்த தேர்தலில் போட்டியிட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டு அவரோடு கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முனைகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு எந்த சந்தர்பத்திலும் அவரை நான் சந்திக்கவும் இல்லை , அவரின் இயக்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன்.
கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்
ஆளுநர் - கிழக்கு மாகாணம்