அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதி செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பாராளுமன்ற ஆய்வாளருமான சோ. ஸ்ரீதரன் தலைமையில் ஹட்டன் இந்திரா விருந்தக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கான தோட்டத் தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் இணைப்பாளர்கள் அமைப்பாளர்கள் வட்டார பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிங். பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ் பிலிப் உட்பட பலர் கருத்துரைத்தனர்.