முதலாம் தவணை விடுமுறைக்காக நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நாளை 11ஆம் திகதி மூடப்பட்டு, மீண்டும் இம்மாதம் 17 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இம்மாதம் 15 ஆம் திகதியை அரசாங்கம் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இம் மாதம் 17, 18 ஆம் திகதிகளை விடுமுறை தினமாகக் கணித்து, இப்பாடசாலைகளையும் இம் மாதம் 22 ஆம் திகதி மீளவும் திறப்பது மிகவும் பொருத்தமானதாக அமையுமென, முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதற்காக இரண்டு நாட்கள் பதில் பாடசாலை நடாத்த முடியும் என்றும் அதிபர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முதலாம் தவணை விடுமுறைக்காக தமிழ், சிங்களப் பாடசாலைகள் கடந்த 5 ஆம் திகதி மூடப்பட்டதோடு, மீண்டும் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.