இன்று (26) மாலை அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புப் படையினருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள போது பொது மக்கள் வெளியில் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும், வீடுகளில் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.
அங்கு குண்டு வெடித்ததா? அல்லது தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கு,
அது குறித்து இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.