சமாதானம், செளபாக்கியம், சுபீட்சம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டாக, இப்புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மலரப் பிரார்த்திப்பதாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சிங்களம், தமிழ் மக்கள் அனைவரும் இன்று உள்ளக்களிப்புடன் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இவர்களுக்கிடையில் இன்று பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, இப்புத்தாண்டை சிறப்புறக் கொண்டாட வாய்ப்புக்கள் உண்டாகின்றன. இவ்வாறான சிறந்த தன்மை, ஏனைய நாட்களிலும் எம் சமூகத்தாரிடம் வரவேண்டும். இதுவே இன்றைய எமது எதிர்பார்ப்புமாகும்.
அரசாங்கம் என்றவகையில், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும், இன ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதே, எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கம் இன்று மிகவும் துள்ளியமாக இடம்பெற்று வருவதையும் கண் கூடாகப் பார்க்கின்றோம்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இன்று இன ஐக்கியத்திற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். இது இன்றைய காலகட்டத்தில் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
நாம் வாழும் காலத்தில் எல்லோருடனும் எப்பொழுதும் அந்நியோன்யமாக வாழ்வோமென்றால், இதுதான் இன்று எமது இலங்கை நாட்டுக்குத்தேவையாகும் சமூகத் தேவைப்பாடாகும்.