நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர்குண்டுவெடிப்புகள் மற்றுமொரு கலவரத்திற்கு தூபமிடுவது போலுள்ளது. பொதுமக்கள் அமைதிகாக்கவேண்டும்.இறைசந்நதியில் இறைபதமடைந்த உறவுகளுக்கு அஞ்சலிகள்.
இவ்வாறு அவசர செய்தியொன்றை விடுத்துள்ளார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்.
அவர் மேலும் கூறுகையில்:
குண்டுக்கலாசாரம் வண்முறைக்கலாசாரம் மறைந்து நாடு அமைதிக்குத்திரும்பிய சமயம் இடம்பெற்றுள்ள தொடர் குண்டுவெடிப்புகள் மக்கள் மத்தியில் பலத்த பீதியை உண்டுபண்ணியுள்ளது.
இதற்கு பின்னால் பாரிய சதிமுயற்சிகள் இருக்கக்கூடும். அதனை முறியடிக்க பாதுகாப்புத்தரப்பினர் முழுமுச்சுடன் செயற்படவேண்டும்.
இறைபதமடைந்த அத்தனைஉறவுகளுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற அதேவேளை அவர்களது குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் கூறவிளைகிறேன்.
எஞ்சிய மக்களைக்காப்பாற்ற உரியதரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிலதினங்களுக்கு பொதுமக்கள் பொதுஇடங்களைத்தவிர்ப்பது நல்லது. பாடசாலைகளை இருதினங்கள் மூடியமை காத்திரமான நடவடிக்கையாகும். அதேபோன்று இருதினங்களுக்கு பொதுவிடுமுறையை அறிவித்தாலும் நல்லது. பொதுப்போக்குவரத்துகள் பாதுகாhப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும். நாட்என் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். என்றார்.