கொடூர பயங்கரவாதச் தாக்குதலுடன் என்னையும் கோர்த்துள்ளமை கவலையளிக்கிறது




ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட்.
எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த (21) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலானது இலங்கை திருநாட்டிற்கு ஒரு அபகீர்த்தியையும் அத்தோடு ஒட்டுமொத்த சமூகமும் கவலை கொள்கின்ற ஒரு சம்பவமாகக் காணப்படுகின்றது என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

குறித்த பயங்கரவாதச் செயலுடன் என்னைத் தொடர்புபடுத்தி ஜே.வீ.பீ மற்றும் பெட்டிநாதன் ஆகிய இணையத்தளங்களில் எனது புகைப்படத்தை பிரசுரித்து என்னை பொலிஸார் தேடிவருவதாகவும், பொதுமக்கள் அவதானத்தோடு இருக்கும்படியும் அச் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளேன் என்று நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உப தவிசாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளராக மக்கள் சேவகனாக செயற்பட்டு வருகின்றேன். என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை வேதனையளிக்கிறது.

நாட்டில் இடம்பெற்ற இப் பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எங்களுடைய சபை அமர்விலும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
எனவே குறித்த இணையத்தளங்கள் இவ்வாறான மோனசமான செய்திகளைப் பரப்பி முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை பார்க்கும்போது கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
நாங்கள் பொலிசாரினால் தேடப்பட்டு வருகின்றோம் என்று அதில் தெரிவித்து உள்ளார்கள் நாங்கள் எங்கேயும் ஓடவுமில்லை ஒழியவுமில்லை இந்தப் பிரதேசத்தில்தான் இருக்கின்றோம் என்று உப தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -