இதற்காக பணம், மனித வளம், மூளைத்திறண் என்பன வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசும் ஒரு மௌலவியால் இந்தளவு திட்டமிட முடியாது. இதன் பின்னால் வேறு சதி இருக்கலாம். அரசு நினைத்தால் நிச்சயம் குற்றவாளிகள் தெரிய வரும்.
முஸ்லிம்கள் தங்களுக்குள் தாங்கள் மோதிக்கொள்வார்கள். ஷீயாவும் அப்படிதான் சுன்னீக்களும்தான். ஆனால் அந்நியவர்களுக்கெதிராக இப்படியொரு தாக்குதலை இந்த நூற்றாண்டில் செய்ததில்லை. ஈரானும் ஈராகும் சண்டை பிடித்ததே தவிர ஈரானும் இந்தியாவும் சண்டை பிடிக்கவில்லை. சவூதியும் எமனும் சண்டையே தவிர சவூதியும் பிரான்சும் சண்டை பிடித்ததில்லை.
நிச்சயமாக இதன் பின்னால் சதி உள்ளது. குற்றவாளிகள் தப்பிப்பதற்காக இதை முஸ்லிம் தீவிரவாதத்தின் பக்கம் திசை திருப்புவதாகவும் இருக்கலாம். அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவின் தந்தைக்கு முன் கூட்டியே தெரியும் என்றால் அரசுக்கும் தெரிந்துள்ளது.
அமைதியாக இருப்போம். சமாதானத்துக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.