சம்மாந்துறை பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தும் கூட்டம்


எம்.எம்.ஜபீர்-
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சினால் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தில் 2019 - 2022 ஆண்டிற்குள் உலக வங்கி, ஜரோப்பிய யூனியன், இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதி உதவியில் சம்மாந்துறை பிரதேச சபை பிரதேசத்திலுள்ள 10 வட்டாரங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தும் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டன் கீழ் பிரதேசத்திலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னுரிமையடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -