கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஓரிரு மாத காலமாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடை ஐவர் அடங்கிய குழுவை நேற்று (14) மாலை சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிண்ணியாவில் கிரீஸ் மனிதர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுத்தி பொது மக்களை அச்சம் கொள்ள் செய்து கடந்த ஓரிரு மாத காலமாக பல் வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தகிக்கப்படுகின்ற கொள்ளைக் கும்பலை, பொது மக்களின் உதவியோடு பொலிஸார் கைது செய்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெரிய கிண்ணியா , பெரியாற்றுமுனை பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுடைய சபியுள்ளாஹ் சகில், 20 வயதுடைய அப்துல் காதர் சப்ரான், 22 வயதுடைய நூர்முகம்மது சாஜித், 21 வயதுடைய சதகத்துள்ளா அப்ராஸ் மற்றும் 19 வயதுடைய ஜாகுரான் சஹான் என பொலிஸார் தெரிவித்தனர்
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி திருகோணமலை, ஜமாலியாவை சேர்ந்த தூலான் என்றழைக்கப்படும் டிலான் தலைமறவாகியுள்ளதாகவும், இவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இவர் முன்னர் மின்சார சபையில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றி இடைநிறுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரித்தனர்
கிண்ணியாவிலுள்ள பணக்காரர்கள் யார் என்பதை அறிந்த இவர் இரவு வேளைகளில் இளைஞர்கள் மூலம் பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்
வீட்டின் ஓட்டைக் கழற்றி விட்டு வீட்டுக்குள் இறங்கி வீட்டு உரிமையாளர்களுக்கு ஸ்விறே மருந்து விசிறிவிட்டு நகை, பணம், மடிக் கணனி என பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கிண்ணியா பொலிஸாரிடம் முறைப்படுகள் செய்த போதிலும் பொலிஸாரின் அசம்பந்த போகினால் DIG சமன் ஜடவர , ASP புத்திக மானத்தூங்க , IP விதான ஆராய்ச்சி ஆகியோரின் கவணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது இவர்களின் நேரடி கண்காணிப்பில் விஷேட குழுவினரின் உதவியுடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பலர் இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பிருக்களாம் என பொலிஸார் சந்தேகப்படுவதாக தெரிவிக்கின்றனர்