அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிலேச்சத்தனமான செயற்பாடாகும் - உதவி தவிசாளர் சுலைமாலெவ்வை-


நேற்று முன்தினம் இலங்கையில் 08 இடங்களில் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த தாக்குதலானது அப்பாவி மக்கள் மீது இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாடாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான வை.எல். சுலைமாலெவ்வை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் நாடு சுமூகமான நிலையினை அடைந்துள்ளதுடன், இந்நாட்டில் மீண்டும் பிரிவினைகளை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த சில அடிப்படை வாத சக்திகள் முயற்சிக்கின்றன.
அந்தவகையில் நேற்று முன்தினம் இலங்கையில் 08 இடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் இதற்கு உதாரணாமாகும். வணக்கஸ்தலங்கள் என்பது மனிதர்கள் தங்களது மன ஆறுதலுக்காகவும், இறை ஆசிக்காகவும் ஒன்று கூடும் இடமாகும். இந்த இடங்களுக்குச் சென்று தாக்குதல் நடாத்துவதென்பது கோழைத்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான செயற்பாடாகும். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் ஒன்றையுமே சாதிக்க முடியாது.
மேலும் இந்த கால கட்டமானது இலங்கையில் உல்லாச பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கையில் பொருளாதாரத்தினை வீழ்ச்சிப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடாகவும் அவதானிக்க முடிகின்றது. மேலும் இந்த தாக்குதலானது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருப்பதோடு, நாட்டின் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு சவாலான காரியமொன்றாகவும் அமைந்துள்ளது.

எனவே மனிதாபிமானமற்ற இத்தாக்குதலானது எவராலும் மன்னிக்க முடியாத குற்றம் என்பதுடன், இந்த தாக்குதலில் தொடர்புபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும். அத்துடன் இந்த தாக்குதலில் உயிர் நீத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் சுகமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -