எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் நடாத்தப்பட்டுவரும் மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று (13) சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபரும் ஜம்இய்யாவின் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசீக், நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபரும் ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவருமான ஏ.ஹபீப் காசிமி, தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி மற்றும் காவத்தமுனை அர் ரஹ்மா விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவரும் எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி உட்பட உலமாக்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் குறித்த கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.