உயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்!


சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்!
பரலோக வாச திருச்சபையின்தலைவர் போதகர் கிருபைராஜா
காரைதீவு நிருபர் சகா-

யேசுபிரான் உயிர்த்த ஞாயிறுதினத்தில் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்தை வன்மையாகக்கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காது சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.
இவ்வாறு பரலோகவாச திருச்சபையின்தலைவரும் அம்பாறை மாவட்ட போதகர் ஜக்கியதலைவரும் அம்பாறைமாவட்ட சர்வமதபேரவையின் உபதலைவருமான போதகர் ஏ.கிருபைராஜா அன்ரனி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆண்டவரின் சந்நிதானத்தில் இவ்வாறு இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதசம்பவத்தைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தோம்.

உடனடியாக எமது தேவாலயசெயற்பாட்டை நிறுத்திவிட்டு மட்டக்களப்பு விரைந்தோம்.அங்கு சியோன் தேவாலயத்தில் கண்டகாட்சிகள் மேலும் அதிர்ச்சியூட்டின. சிறுகுழந்தைகள் உடலங்கள் குருதியில் சிதறிக்கிடந்தன. அபயவங்கள் ஆங்காங்கே தூக்கிவீசப்பட்டிருந்தன.
உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.
30வருடகாலமாக பாரிய யுத்தத்தைச் சந்தித்தவர்கள் நாங்கள். இன்னமும் அவைதொடர்வதற்கு அனுமதிக்கலாமா?
இச்செயல் நன்குதிட்டமிட்டசெயலாகவே பார்க்கக்கூடியதாயுள்ளது. தாக்குதல் நடாத்தியவர்கள் சொர்க்கத்திற்கு போகலாம் என மார்க்கம் கூறியிருந்தால் அவர்கள் அதிலிருந்து மாறவேண்டும்.

உலகிலே பிரச்சினைகள் நடந்துகொண்டுதானிருக்கிறது. இலங்கையில் கடந்த 10ஆண்டுகாலமாக எவ்வித பிரச்சினையுமின்றி நாடு நகர்ந்துவந்தது. கிறிஸ்தவமக்கள் சகலஇனத்தவரோடும் நன்றால பழகிவருகிறார்கள்.
எனவே இனிமேலும் இப்படியான பய்ஙகரவாதச்சம்பவங்களுக்கு இடமளியாது பாதுகாப்கை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -