கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளரின் அவசர அறிவிப்பு..!


பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவேண்டியபாதுகாப்பு ஏற்பாடுகள்!
காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்
மேற்கொள்ளப்படவேண்டியபாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக
கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஊடகங்கள் வாயிலாக சகல பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இவ்வறிவித்தலைவிடுத்துள்ளார்.

கல்வியமைச்சு பொலிஸ்திணைக்களம் பாதுகாப்புஅமைச்சு என்பனவற்றின்
அறிவுறுத்தலுக்கமைய இம்முன்னேற்பாடு எடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் 25/2019ஆம் இலக்க சுற்றுநிருபத்தை கவனத்திற்கொள்ளுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எதிர்வரும் திங்கள்(29)கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படுவதால் கீழ்வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்க கிழக்கு மாகாணகல்வித்திணைக்களம் நடவடிக்கைஎடுத்துள்ளது.

சகல பாடசாலைகளிலும் விசேடபாதுகாப்புக் கண்காணிப்புக்குழுவொன்றை
உருவாக்கிக்கொள்ளுதல்வேண்டும். அதிபர் தலைமையிலான இக்குழுவில் ஆசிரியர் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கநிருவாகிகள் பழையமாணவர்சங்க நிருவாகிகள் போன்றோர் இடம்பெறலாம். பாடசாலைவகைக்கேற்ப குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.
இக்குழுவினர் தினமும் பாடசாலை ஆரம்பமாகமுன்னர் அதாவது காலை 7மணிக்கு முன்னராக பாடசாலைச்சூழலை சுற்றாடலை முற்றாக சோதனைசெய்யவேண்டும். பாடசாலைவகுப்பறைகள் கன்ரீன்கள் வாகனம்நிறுத்துமிடங்கள் அலுவலகங்கள் முதலான சகல கட்டடங்களையும் சோதனை செய்யவேண்டும். தேவையேற்படின் மரங்கள் பூச்சாடிகளையும் சோதனைசெய்வது பொருத்தமாகும்.

அதிபர் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சகல வாகனங்களும் நிறுத்தப்படும் இடம் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இடையில் வாகனங்களை எடுத்துச்செல்லுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும். மிகஅவசியமாயின் அதிபரின் நேரடிக்கண்காணிப்பில் விடுவிக்கப்படலாம்.

பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும்வரை பாடசாலை பிரதானவாயில் தொடக்கம் சகல வாயில்களும் மூடப்படவேண்டும். இடையில் யாராவது உள்ளே வருவதாகவிருந்தால் அதிபரின் அனுமதிபெற்று வந்துசெல்லமுடியும். ஆனால் அவர்களது வாகனங்கள் உள்ளே செல்லஅனுமதித்தல்கூடாது.

அதிபரின் தொலைபேசி இலக்கம் பிரதானவாயலில் காட்சிப்படுத்தப்படவேண்டும். வருபவர்கள் அவசியமாயின் அவ்விலக்கத்தோடு தொடர்புகொண்டு தேவையைநிறைவேற்றிக்கொள்ளலாம்.
பாடசாலையினுள் பாவிக்கப்படாமலுள்ள அறைகள் கட்டடங்களுக்கு அருகில் மாணவர்களை கூட்டமாகநிற்பதை தவிர்த்தல்வேண்டும். குறித்த அறைகள் கட்டடங்களை சோதனைசெய்வதும் அவசியமாகும்.

பாடசாலை கலையும் நேரம் முக்கியமானது. அச்சமயம் மாணவர்கள்
கூட்டமாகச்செல்வதை அனுமதிக்கவேண்டாம்.ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வெளிச்செல்ல அனுமதிக்கலாம். வெளியேறியபின்னரும் பின்னரும் மாணவர்கள் கூட்டமாகச்சைக்கிளில் செல்வதையோ கூட்டமாக நடந்துசெல்வதையோ தவிர்த்தல் நலம்.

மாணவர்களை அழைத்துச்செல்லவரும் பெற்றோhர்கள் பாதுகாவலர்கள் வாகனங்கள்பாடசாலைக்கு அப்பால் 100மீற்றர் தொலைவில் தரித்துநிற்கவேண்டும். தேவைப்படின் பாடசாலை கலையும்நேரம் பிரதானவீதியில் சுமார் 10நிமிடநேரமாவது வீதிப்போக்குவரத்தை பொலிசாhரின் துணைகொண்டு நிறுத்திக்கொள்ளலாம்.
அதிபர்கள் தேவைப்படுமிடத்து அந்தந்தப்பிரதேச
பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரியுடன் தொடர்புபட்டு விசேடபாதுகாப்பு
ஒழுங்குகளையும் மேற்கொள்ளமுடியும்.
பாடசாலையையண்டிய சுற்றாடலில் கூவிவிற்கும் நடமாடும் சில்லறைவியாபார  ஊர்திகள் வாகனங்கள் உலாவருவதைத்தவிர்த்தல்.

மாணவர்கள் பெருமளவில் ஒன்றாகச்சங்கமிக்கும் முக்கிய விழாக்களை வைபவங்களை கூட்டங்களை சமகாலத்தில் தவிர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது.
சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ள பாடசாலைகள் அவற்றை இயங்குநிலையில் வைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். பாடசாலைச்சூழலில் யாராவது இனந்தெரியாத சந்தேகத்துக்குரிய நபர்கள்உலாவினால் அருகிலுள்ள பொலிஸ்நிலையத்திற்கு அறிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

அதேவேளை பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாவதற்கு முதல்நாளே (28-ஞாயிறு) பாடசாலையின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது அந்நதந்த கல்விச்சமுகத்தின் கடமையாகவுள்ளது. அதுபற்றி கல்வியமைச்சு சகல மாகாண கல்வியமைச்சின் செயலாளர்கள் மாகாணக்கல்விப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோருக்கு 25/2019ஆம் இலக்க சுற்றுநிருபத்தை அனுப்பிவைத்துள்ளது.

அவர்கள் அவ்வறிவித்தலுக்கமைவாக பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவருகிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -