சம்மாந்துறை கைத்தொழில் பேட்டைக்கு காணி வழங்குவதற்குகென குழுவொன்று அமைக்க தீர்மானம்!

ரவு செலவுத்திட்டத்தில் மொழியப்பட்டுள்ள சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை நிறுவதற்கு காணி ஒதுக்கீடு செய்வதா அல்லது இல்லையா என்பதற்கு குழுவொன்று அமைத்து அதன் அறிக்கையின் பின்னரே கைத்தொழில் வலயம் அமைப்பது சம்பந்தமாக அறிவிக்க முடியும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரின் இணைத்தலைமையில் தலைமையில் நேற்று(11) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவிக்கையில் சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை நிறுவுவதற்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷீறா, ஜம்இயத்துல் உலமா ஆகிய முச்சபைகள் காணி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது ஆனால், இக்கைத்தொழில் பேட்டைக்கு முதலீடு செய்கின்ற முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் யார் என்பதனை இதுவரையும் தெரியப்படுத்தவில்லை. இது சம்பந்தமாக நியாயமான சந்தேகங்கள் காணப்படுகின்றன. இதை தெரியப்படுத்தாமல் குறிப்பிட்ட காணியை வழங்க முடியாது. சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழில் சாலையை ஹாமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இங்கு முதலீட்டாளர்கள் யார் என்பதனை தெரிவிக்க வேண்டும். இதற்கு எதிரானவன் என்று படம் காட்ட வேண்டாம். ஊரை எப்போதும் நேசிக்கின்றவன். அதிகாரம் என்பதனை அல்லாஹ் தருகின்றவன்.

சம்மாந்துறை தனித்துவமான கலாசாரத்தைக் கொண்ட ஊராகும். இன்று சம்மாந்துறை, அம்பாறை எல்லைகள் திணிக்கப்பட்டுள்ளது. கரங்கா வட்டை முஸ்லிம் மக்களின் காணியில் பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த விகாரை, வீடுகள் கட்டியுள்ளார்கள், நுரைச்சோலையில் சுனாமி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்க முடியாதுள்ளது. இவ்வாறான நிலையில் இக்கைத்தொழில் பேட்டைக்கு குறிப்பிட்ட அமைச்சுக்கு உடனடியாக சம்மாந்துறை பாம் வட்டைக் காணியை வழங்க முடியாது. சம்மாந்துறையில் உள்ள அரச காணியென்றால் இக்காணி மட்டும்தான் வேறு காணிகள் கிடையாது.

எனவே, இதற்கு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத். தலைமையிலான குழுவொன்றினை அமைத்து அதில் சம்மாந்துறை முச்சபைகள், புத்திஜீவிகள், பொதுநல அமைப்புக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் இக்கைத்தொழில் பேட்டை அமைப்பது சம்பந்தமான சாதக, பாதகங்களை ஆராய்ந்து விரைவாக அறிக்கையினை சமர்ப்பித்த பின்னர் காணி வழங்குதற்கு முடியும். என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், உப தவிசாளர் வெள்ளி ஜெயச்சந்திரன், பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஐ.எல்.எம்.மாஹீர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்,ஏ. மஜீத், உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்வி, காணி, மண் அகழ்வு, விவசாயம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், பிரதேச சபை, தேசிய வீடமைப்பு, கமநல அபிவிருத்தி, கிராமியத் தொழிற்துறை, நகர அபிவிருத்தி ஆகிய திணைக்களங்கள், சபைகள் தொடர்பான பிரச்சினைகளும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், சம்மாந்துறை வலயத்தில் உள்ள பாடசாலைகளை தரமுயர்த்தல், அரச காணிகள் மீதான அத்துமீறல்கள் குறித்தும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக இடம் பெற்றுவரும் வீடமைப்பு திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.
சம்மாந்துறை வலயத்தில் உள்ள பாடசாலைகளை தரமுயர்த்தல், அரச காணிகள் மீதான அத்துமீறல்கள் குறித்தும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக இடம் பெற்றுவரும் வீடமைப்பு திட்டம் குறித்தும் ஆராயப்பட்டதுடன், முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலினால் சமர்ப்பிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் மும்மொழிப்பாடசாலை அமைப்பதற்கான நடவடிக்கை, விவசாய நிலங்களை எதிர்கால அபிவிருத்திகாகவும், குடியிருப்புகளுக்கு பயன்படுத்துவதற்காகவும் மேட்டு நிலங்களாக மாற்றுதல், சம்மாந்துறையின் எதிர்கால நிரந்தர அபிவிருத்திக்கான மாஸ்டர் பிளன் ஒன்றை தயாரித்தல் போன்ற முன்மொழிவுகள் ஆராயப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நடைமுறையிலுள்ள கம்பெரலிய வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராம சக்தி வேலைத்திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம், சுகாதாரம், வீதி அபிவிருத்தி அபிவிருத்தி போன்ற 550 வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் சார்ந்த மீளாய்வும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -