பிரதேச செயலகங்கள் தோறும் ஊடக நிலையங்களை ஊடக அமைச்சு ஸ்தாபிக்க வேண்டும்

சிலோன் மீடியாபோரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் கோரிக்கை
ஹாசிப் யாஸீன்-
பிராந்திய ஊடகவியலாளர்களின் நன்மை கருதி பிரதேச செயலகங்கள் தோறும் ஊடக நிலையங்களை ஊடகஅமைச்சு ஸ்தாபிக்க வேண்டும். இவ்விடயமாக ஊடக சங்கங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் மாதாந்தக் கூட்டமும் ஊடகத்துறைக்கு ஆற்றிய பணிக்காக கௌரவம் பெற்ற சிலோன்மீடியா போரத்தின் இரு ஊடகவியலாளர்களான அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் மற்றும் ஊடகவியலாளர் எம்.எம்.ஜபீர்ஆகியோரை பாராட்டும் நிகழ்வும் நேற்று (19) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது சீ பிறீஸ் ரெஸ்டூரெண்டில் போரத்தின்தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர்சங்கத் தலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக்பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் உரையாற்றும் போதே போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிலோன் மீடியா போரம் ஊடகத்துறையில் களம் இல்லாத இளம் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறையில்ஆர்வமுள்ளவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்க தயாராகவுள்ளது. இன்று முகநூல்களில் இளைஞர்கள்நாகரீகமற்ற முறையிலும், இனவாத, பிரதேச வாத கருத்துக்களை தூண்டுகின்ற வகையில் எழுதுவதையிட்டு நாம்கவலையடைகின்றோம். சமூக வலைத்தளமான முகநூலுக்கென்று ஒரு ஒழுக்கக்கோவை, கட்டுப்பாடு, தர்மம்என்றில்லை. ஆனால் ஊடகத்துறைக்கு கட்டுப்பாடு, ஊடக தர்மம், பொறுப்புக்கூறல் என்ற வரையறைகள் உள்ளன.

இன்று பிரதேச செயலகங்களில் மாகாண, மத்திய அமைச்சுகளின் பணிகளை மேற்கொள்வதற்கு அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவ்வமைச்சுக்களின் பணிகள்; செய்து வருகின்றனர். அவ்வாறு ஊடகத்துறைஅமைச்சும் பிராந்திய ஊடகவியலாளர்களின் நன்மை கருதி பிரதேச செயலகங்களில் ஊடக நிலையம் ஒன்றினைஸ்தாபித்து அதில் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தரை நியமித்து அந்நிலையத்தில் கணனி, பெக்ஸ் மற்றும்இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதன் மூலம் பிராந்திய ஊடகவியலாளர்கள்தங்களது செய்திகளை அனுப்புவதற்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கும் உதவியாகவிருப்பதோடு மக்களும்இதன் மூலம் நன்மையடைவார்கள்.

சிலோன் மீடியா போரம் ஊடகவியலாளர்களின் நலனிலும், உரிமை சார்ந்த விடயத்திலும் அக்கறையுடன்செயற்படும். அத்தோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அதற்காக தீர்வுகளைபெற்றுக் கொடுக்க முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -